WhatsApp
WhatsApp

வேதத்தின் ஆண்டவர்

Jun 15, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதி உபாகமம் 5:1-21

 

சில சமயங்களில் நாம் சிந்திக்காமல் கடவுளைப் பற்றி பேசுகிறோம்கடவுள் அன்பானவர்ஆனால் அவரது அன்பின் காரணமாகநாம் கடவுளை சர்வசாதாரணமாக நடத்த முடியாதுபேராசிரியர் டிம் மிஸ்கிமென், "முறையான இறையியல்என்ற தனது குறிப்புகளில்கடவுளை நம் வார்த்தைகளினால்சித்தரிப்பதால்அதை சரியாகவும் வேதத்தின் அடிப்படையிலும் செய்ய நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.   "உங்கள் தேவனாகியகர்த்தருடைய நாமத்தை வீணாய்ப் பயன்படுத்தாதிருங்கள்கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணாய்ப் பயன்படுத்துகிறவனை குற்றமில்லாமல் விடார்" (யாத்திராகமம் 20:7) என்று வேதம் சொல்லுகிறது.

 

வேதாகமத்தில் கடவுள் தன்னை வெளிப்படுத்திய விதத்திற்கு முரணான வழிகளில் அவரை விவரிக்கும் போதெல்லாம் நம் வார்த்தைகளால் கடவுளைக்குறித்த  தவறான எண்ணத்தை நாம் உருவாக்க முடியும்.   கவனக்குறைவான அல்லது தவறான பேச்சு கடவுளின் குணத்தை வேறுபடுத்திக் காட்டும்.

 

நாம் கடவுளின் அன்பைப் பற்றி மட்டுமே பேசிஅவருடைய பரிசுத்தத்தைப் பற்றி பேசாவிட்டால்கடவுள் எல்லா பாவங்களையும் பொறுத்துக்கொள்கிறார்என்றும்தீமைக்கு தண்டனை அளிப்பதில்லை என்று மக்கள் நினைக்கலாம்கடவுளின் கிருபைக் குறித்து பேசாமல் அவரது நீதியை மட்டும்எடுத்துக்காட்டினால்மக்கள் அவரை கடுமையானவராகவும் அணுக முடியாதவராகவும் கருதலாம்கடவுள் நாம் கேட்கும் அனைத்தையும் வழங்குபவராக நாம்சித்தரித்தால்அவரை படைப்பின் இறையாண்மை கொண்ட இறைவனை விட மனித விருப்பங்களை நிறைவேற்றும் ஊழியராக நாம் குறைக்கிறோம்.   கடவுள்அவருடைய குணத்தை மாற்றுவார்அவரது வாக்குறுதிகளை மீறுவார்அவர் பாவத்தை புறக்கணிப்பார்  என்றும் நாம் பேசினால்அவருடைய உண்மையையும்பரிசுத்தத்தையும் தவறாக சித்தரிக்கிறோம்.

 

இதனால்தான் 10 கற்பனைகளில் மூன்றாவது கற்பனை மிகவும் முக்கியமானதுகடவுளின் பெயரை வீணாக உபயோகிப்பது அவதூறுகளை விட மோசமானது.  இது கடவுளின் பெயரை கவனக்குறைவாகவோபொய்யாகவோ அல்லது அவரை தவறாக சித்தரிக்கும் விதத்திற்கு சமம்.   'கடவுளைப் பற்றி சர்வசாதாரணமாக  பேசுவது மிகவும் ஆபத்தான விஷயம்என்று ஒரிஜென் என்பவர் குறிப்பிட்டார்நாம் கடவுளை எப்படி வணங்குகிறோம் என்பதில்மட்டுமல்லாமல்அவரைப் பற்றி நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அவருடைய எச்சரிக்கை நமக்குநினைவூட்டுகிறது.

 

கடவுளைப் பற்றிய நமது புரிதல் தவறாக இருந்தால்நமது வழிபாடுகீழ்ப்படிதல்நம்பிக்கை ஆகியவையும் பாதிக்கப்படும்.   ஆகையால்கடவுளைப் பற்றியநமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் வேதத்தைக்கொண்டு நாம் தொடர்ந்து சோதிக்க வேண்டும்.  

 

என் நண்பரேஆசிரியர்கள்பெற்றோர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் என்ற முறையில்கடவுளைப் பற்றி சரியாகவும் வேதத்தின்படியும் பேச வேண்டியபொறுப்பு நமக்கு உள்ளதுநமது விருப்பங்களின்படி கடவுளை நாம் விவரித்தால்நம் மனதிலும் மற்றவர்கள் மனதிலும்  ஒரு பொய்யான கடவுளைஉருவாக்குவோம்.

 

ஜெபம்:-  பரலோகத் தகப்பனேநீர் வேதத்தில் உம்மை  வெளிப்படுத்தியது போல் உம்மை அறியவும்ஆவியோடும் உண்மையோடும் உம்மை வணங்கவும்எங்களுக்கு உதவி செய்யும்ஆமென்!


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *