WhatsApp
WhatsApp

என் தூதர்.

Jul 17, 2026 By Hephzibah Stephen

வேதப்பகுதிமல்கியா 4:1-6

 

மல்கியா என்றால் 'என் தூதர்என்று பொருள்பழைய ஏற்பாட்டில் கடைசி தீர்க்கதரிசியாகிய அவர்மக்களை மீண்டும் உடன்படிக்கை விசுவாசத்திற்குஅழைப்பதை காண்கிறோம்

 

மல்கியாவின் காலத்தில் மக்கள் வாழ்ந்த விதம் நமக்கு நம் காலத்தை நினைவூட்டுகிறது!

 

தசமபாகம் கொடுக்காமல் இருப்பதன் மூலமும்குறைபாடுள்ள விலங்குகளை பலியாகக் கொண்டுவருவதன் மூலமும் மக்கள் கடவுளை அவமானப்படுத்தினர்மக்கள்  கடவுளுக்கு எதிராக புகார் கூறிகடவுள் நியாயமற்றவர் என்று குற்றம் சாட்டினர்துன்மார்க்கர்கள் செழித்து வருவதால் கடவுளுக்கு சேவை செய்வதுபயனற்றது என்று கூறினர்ஆசாரியர்களும் கடவுளின் சட்டத்தை மக்களுக்கு கற்பிக்கத் தவறினர்ஆசாரியர்கள் லஞ்சம் வாங்கிஅப்பழுக்கற்ற பலி மிருககங்களுக்கு பதிலாக குருட்டுநொண்டி மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளை பெற்றுக்கொண்டனர்மக்கள் தங்கள் திருமண உடன்படிக்கையைமீறினர்.

 

இந்நிலை இன்றைய நமது உலகத்தையே நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் இன்று நம் ஒவ்வொருவரையும் நம் இருதயத்தை சோதித்து அறிய அழைக்கிறார்.

 

இன்று நமது வழிபாடு எப்படி இருக்கிறதுஇது இதயப்பூர்வமானதாக இல்லாமல் உயிரற்றதாக மாறிவிட்டதாநாம் கடவுளுக்கு நம் சிறந்ததைவழங்குகிறோமா அல்லது நமக்கு  உள்ள மிச்ச மீதியை  வழங்குகிறோமாநம்முடைய தசம பாகங்களாலும் காணிக்கைகளாலும் கடவுளைமகிமைப்படுத்துவதில் நாம் நேர்மையாக இருக்கிறோமா? நம்முடைய திருமண உடன்படிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோமா?

 

இவை இன்று நாம் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகள் ஆகும்.

 

மல்கியாவின் புத்தகம் ஒரு எச்சரிக்கையுடன் மட்டும் முடிவடையவில்லைஒரு வாக்குத்தத்ததையும் அளிக்கிறது.

 

கடவுள் அன்புடன் தனது மக்களை மனந்திரும்புவதற்கு அழைக்கிறார்மல்கியா 3:6-7 “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”ஆணவம் கொண்டவர்களுக்கும் துன்மார்க்கர்களுக்கும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிகடவுள் எச்சரிக்கிறார்.  ஆனாலும் அவர் நாமத்துக்குப் பயந்திருக்கிறவர்கள் மேல் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; அவர்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவார்கள் என்று கூறுகிறார்.

 

என் நண்பனே,  வரவிருக்கும் கர்த்தருடைய நாளுக்காக மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகஉங்களையும் என்னையும் தூதர்களாக கடவுள் நியமித்துள்ளார்மல்கியா கர்த்தருடைய முதலாம் வருகையை எதிர் நோக்கினார். நாமோ கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறோம்நாம் கவனக்குறைவாகவாழ வேண்டாம்கடவுள் தம்மை முழு மனதுடன் பின்பற்றுபவர்களையே தேடுகிறார்உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் அவர் மீதான உங்கள்அன்பை பிரதிபலிக்கட்டும்.

 

ஜெபம்:  கர்த்தராகிய இயேசுவேஎன் சிறந்ததை விட குறைவாக நான் உங்களுக்கு வழங்கிய நேரங்களுக்கு என்னை மன்னித்துஎன்னைச் சுற்றியுள்ளமக்களுக்கு உங்கள் அன்பின் தூதராக இருக்க உதவி செய்யும்ஆமென்.

 


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *