பாபேலின் படிப்பினைகள்
வேதப்பகுதி: ஆதியாகமம் 11:1-9
பாபெல் கோபுரத்தின் கதையிலிருந்து நான் பெற்ற மிகப்பெரிய நுண்ணறிவுகளில் ஒன்று, ஃபிரிஸ்கோவின் ஸ்டோன்பிரியர் தேவாலயத்தில் பாஸ்டர் டாம்ஹேய்ஸால் வழங்கப்பட்ட ஒரு பிரசங்கத்தின் மூலம் வந்தது. பல ஆண்டுகளாக நான் மக்களின் பெருமையை மட்டுமே நினைத்தேன். அவர்கள் தங்களுக்கு"ஒரு பெயரை உருவாக்க" விரும்பினர். ஆனால், கடவுளின் கட்டளைக்கு அவர்கள் வேண்டுமென்றே கீழ்ப்படியாதது என்ற மற்றொரு மாபெரும் பாவத்தை நான்கவனிக்கவில்லை!
ஆதியாகமம் 1:28 ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டபின்பு, தேவன் அவர்களை நோக்கிஃ நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்றுகட்டளையிட்டார். ஜலப்பிரளயத்தைத் தொடர்ந்து, நோவாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் இரண்டு முறை அதே கட்டளையை மீண்டும் கூறினார்ஃ "பலுகிப்பெருகி, பூமியை நிரப்புங்கள்" (ஆதியாகமம் 9:1,7). பாபேலிலோ, ஜனங்கள் பூமியின்மேல் சிதறடிக்கப்படாதபடிக்கு, ஒரு கோபுரத்தை உண்டாக்குவோம்என்றார்கள்.
அவர்கள் கடவுளின் கட்டளையை எதிர்த்தனர். பூமியை நிரப்பும்படி கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார், சிதறாமல் 'நிரப்புதல்' சாத்தியமில்லை!
நாம் எத்தனை முறை இந்த தவறையே செய்கிறோம் என்று சிந்தித்து பாருங்கள்!
நாம் கடவுளின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறோம். கீழ்ப்படிதல் இல்லாமல் கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்களை நாம் விரும்புகிறோம். கடவுள் நாம் மற்றவர்களைமன்னிக்குமாறு அழைக்கிறார், ஆனால் நாம் மனக்கசப்புடன் மறுக்கிறோம். அவர் நாம் சாட்சியாக வாழ, சாட்சி சொல்ல அழைக்கிறார், ஆனால் நாம்அமைதியாக இருக்கிறோம். நம்மை சேவை செய்ய அழைக்கிறார், ஆனால் நாம் சாக்குப்போக்கு சொல்கிறோம்.
பாபேலைக் கட்டியவர்களைப் போலவே, கடவுளின் சித்தத்தை விட நம் சொந்த திட்டங்களுக்கே அதிகமாக அர்பணிக்கிறோம்.
ஆனால் அவர்கள் அஞ்சிய காரியமே கடவுள் சாதித்த காரியமாக மாறியது.
அவர்கள் சிதறிப்போக மனதில்லாதிருந்தார்கள்; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறடித்தார் (ஆதியாகமம் 11:8) மனிதனின்எந்தத் திட்டமும் கடவுளுடைய நோக்கங்களை முறியடிக்க முடியாது!
கீழ்ப்படியாமை பல நேரங்களில் ஞானமாக தோன்றுகிறது என்பதை பாபெல் கோபுரம் நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளின் சித்தத்தைத் தேடாத போதெல்லாம், நாம் பாபேலின் பாவத்தை மீண்டும் செய்கிறோம்.
இன்று நாம் பதிலளிக்க வேண்டிய கேள்வி என்னவென்றால்ஃ நான் எனது சொந்த திட்டங்களை பின்பற்றுகிறேனா, அல்லது கடவுளின் கட்டளைக்குகீழ்ப்படிகிறேனா என்பதே.
என் நண்பரே, விசுவாசிகளாகிய நம் அழைப்பு நம் சொந்த ராஜ்யத்தைக் கட்டி எழுப்புவதற்கு அல்ல கடவுளின் ராஜ்யத்தை எழுப்புவதற்கே. அவருடையநோக்கங்கள் எப்போதும் உயர்ந்தவைகளே.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக நான் என் சொந்தத் திட்டங்களைப் பின்பற்றிய நேரங்களுக்கு என்னைமன்னியும். கீழ்ப்படியும் இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
