கணக்கெடுப்புகள்
வேதபாடம்: 2 சாமுவேல் 24:1-10
எண்ணாமகம் புத்தகத்தில் இரண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புகள் இடம் பெறுகிறது. முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இஸ்ரேலின் பயணத்தின்தொடக்கத்திலும், இரண்டாவது கணக்கெடுப்பு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் எடுக்கப்பட்டது, ஏனெனில் ஒரு புதிய தலைமுறைகானானுக்குள் நுழையத் தயாராக இருந்தது. எகிப்திலிருந்து வந்த முதல் தலைமுறை தங்கள் அவநம்பிக்கையின் காரணமாக வனாந்தரத்தில்மரித்துவிட்டார்கள்.
கடவுள் மோசேக்கு போருக்குச் செல்ல முடிந்தவர்களை எண்ணும்படி கட்டளையிட்டார். யுத்தத்திற்கு முன்பு கணக்கெடுப்பது விவேகம். செலவைக்கணக்கிடுவதைப் பற்றி இயேசுவே கற்பித்தார்: உங்களில் யார், ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பி, கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ என்று இயேசு கேட்டார் (லூக்கா 14:28-32)
நமது வங்கி கணக்கை எண்ணுவதிலோ, திட்டமிடுவதிலோ, தயாரிப்பதிலோ அல்லது மதிப்பிடுவதிலோ எந்தத் தவறும் இல்லை. நமது வளங்களை எண்ணும்போது நமது வளங்களை நம்புவது ஆபத்து!
இதுதான் 2 சாமுவேல் 24-ல் தாவீதின் கணக்கெடுப்பை மிகவும் வித்தியாசமாக்கியது. தனது இராஜ்ஜியத்தின் வலிமையை குறித்து அவரது இதயம்பெருமையடைந்தது. இஸ்ரவேலுக்கு வெற்றியைக் கொடுத்த கர்த்தருக்கு மகிமை செலுத்தாமல், தன் படையின் அளவைப் பார்க்கத் தொடங்கினார். அந்தபெருமையை யோவாப் உணர்ந்தார், ஆனால் அவரால் ராஜாவைத் தடுக்க முடியவில்லை. பின்னர், தாவீதின் இதயம் அவரைக் கண்டித்தது, அவர் தனதுபாவத்தை உணர்ந்தார்.
அதே வலையில் நாம் எவ்வளவு எளிதில் விழ முடியும்!
வங்கியில் உள்ள பணம், நமது சாதனைகள், நமது கல்வி, நமது உடைமைகள், நமது தொடர்புகள், நமது திறன்கள் மற்றும் நமக்கு ஆதரவளிக்கும் நபர்களின்எண்ணிக்கையைக் கூட நாம் கணக்கிடுகிறோம். திட்டமிடுவது புத்திசாலித்தனம், ஆனால் நமது நம்பிக்கை கடவுளிடமிருந்து நம்மிடம் மாறும்போது, பெருமை நுழைகிறது.
இன்று நாம் பதிலளிக்க வேண்டிய கேள்வி என்னவென்றால்ஃ நாம் எண்ணும்போது, நமது நம்பிக்கை எங்கே?
நாம் கவனமாக தயாராகிக் கொள்ளலாம், ஆனால் நமது இறுதி நம்பிக்கை ஒருபோதும் நம் பலத்தில் இருக்கக்கூடாது. நம்முடைய பெலன் கர்த்தரிடமிருந்துவருகிறது. வேதாகமம் சொல்லுகிறது, " சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்"(சங்கீதம் 20:7). நம்முடைய வெற்றி ஆண்டவரிடமிருந்து மட்டுமே வருகிறது.
என் நண்பரே, செலவைக் கணக்கிடுங்கள், விடாமுயற்சியுடன் தயாராகுங்கள், கடவுள் உங்களுக்கு வழங்கியதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் ஒருபோதும் உங்களை நம்ப வேண்டாம். ஒவ்வொரு வெற்றியும் கடவுளிடமிருந்து வருகிறது.
ஜெபம்: பரலோகத் தந்தையே, திட்டமிடுவதற்கும் தயாராவதற்கும் ஞானத்தைக் கொடும். பெருமையிலிருந்து எங்கள் இதயங்களைக் காப்பாற்றும். ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
