பறந்து காக்கிற பட்சிகளைப்போல
வேதபாடம்: ஏசாயா 31:4-9
குழந்தைகள் இளமையாக இருக்கும்போது நாம் அவர்களை மிகவும் பாதுகாக்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், அவர்களின்நண்பர்கள் யார் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அவர்கள் வளர்ந்து சுதந்திரமாக மாறும்போது, நாம் மெதுவாக கட்டுப்பாட்டை இழக்கிறோம், அவர்கள் பெரியவர்களாகும்போது, அவர்களைப் பார்த்து ஜெபம் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது!
நான் இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தர் இந்த வசனத்தை என் மனதில் கொண்டு வந்தார். " பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்."(ஏசா. 31:5). ஒரே ஒரு வசனத்தில், கடவுள் எருசலேமை மூன்று தனித்துவமான வழிகளில் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார்: அவர் அதை பாதுகாப்பார், தப்புவிப்பார், கடந்துவந்து அதை விடுவிப்பார். கர்த்தரே நம்முடைய பிள்ளைகளைச் செட்டைகளால் மூடி, அவர்களைப் பாதுகாப்பார், அவர்களை விடுவிப்பார், அவர்களை தப்புவிப்பார். இந்த வசனம் என் மனதை அமைதிப்படுத்தியது.
இது எழுதப்பட்ட நேரத்தில், எருசலேம் அசீரிய இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. கடவுளை நம்புவதற்குப் பதிலாக, யூதாவின் தலைவர்கள்,எகிப்தின் குதிரைகள் மற்றும் இரதங்களை நம்பி எகிப்துடன் ஒரு கூட்டணியை உருவாக்க முயன்றனர். இந்த வசனத்தில், கடவுள் தனது கவனிப்பை, தனதுகூட்டின் மீது வட்டமிடும் ஒரு தாய் பறவையுடன் ஒப்பிடுகிறார். வேட்டையாடும் பறவை நெருங்கும் போது ஒரு தாய் பறவை தனது சொந்த பாதுகாப்பைக் கருதாமல், தனது குஞ்சுகளைப் பாதுகாக்க தனது இறக்கைகளை ஒரு கவசமாகப் பயன்படுத்துமாம்.
கடவுள் தனது மக்களை ஒரு பறவையைப் போலப் பாதுகாக்கும் உருவப்படம் வேதம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. கழுகு தன் கூட்டை கலைத்து, தன்குஞ்சுகளின் மேல் பறந்து, தன் செட்டைகளை விரித்து, அவைகளை சுமப்பதுபோல, கர்த்தர் ஒருவரே இஸ்ரவேல் புத்திரரை நடத்தினார் என்று உபாகமம்32:11 கூறுகிறது. இஸ்ரவேல் மக்கள் வணங்கா கழுத்துள்ள மக்கள். அற்புதங்களை அனுபவித்த பிறகும், அவர்கள் இறைவனை முழுமையாக நம்பவில்லைகீழ்ப்படியவும் இல்லை. ஆனாலும் கர்த்தர் அவர்களைக் கண்காணித்து, அவர்களை நடத்தி, தாம் வாக்குத்தத்தம்பண்ணின தேசத்துக்குக் கொண்டுபோனார்.
நாம் வணங்கும் ஆண்டவர் உண்மையுள்ளவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
என் நண்பரே, நம் அன்புக்குரியவர்கள், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளில் சிலர் விசுவாசிகளாக இருக்கலாம், சிலர் இல்லாமலும் இருக்கலாம். ஆனால், கவலை வேண்டாம். அவர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள், இயேசுவின் இரத்தத்தால் அவர்களை மூடுங்கள். ஒரு கோழி தனது குஞ்சுகளைதனது இறக்கைகளின் கீழ் சேகரிப்பது போல் இயேசு அவர்களையும் சேகரிக்க ஏங்குகிறார். கர்த்தரே அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்குவழிநடத்துவார்.
ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களை உங்கள் விலைமதிப்பற்ற கைகளில்ஒப்படைக்கிறேன். நீர் அகிலத்தின் ஆண்டவர். சர்வ லோகத்துக்கும் தேவன். சர்வ வல்லவர். நீர் அவர்களை காத்துக்கொள்வீர். ஆமென்.
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *
