WhatsApp
WhatsApp

கர்த்தரை நம்புங்கள்

Jun 30, 2026 By Hephzibah Stephen

வேதபகுதிமத்தேயு 18:1- 5

 

எங்கள் முதல் பேத்தி நிவி சுமார் 2 வயதாக இருந்தபோதுஎங்கள் மகன் சுஷில் அவளை உயர தூக்கி எறிந்து பிடிப்பார்நான் பார்க்கும்போதெல்லாம் பயம் என்னை பிடித்துக்கொள்ளும். ஆனால் நிவி சிரித்துக்கொண்டே இருப்பாள்அவள் முகத்தில் எந்தக் கவலையும் இருக்காதுஏன்அவள் தன் தந்தையைமுழுமையாக நம்பினாள்.   அவன் அவளை ஒருபோதும் கீழே விழ விடமாட்டான் என்பதை அவள் அறிந்திருந்தாள்அது அவள் தன தகப்பன் மீது கொண்டிருந்த நம்பிக்கையை காட்டுகிறது.

 

இந்த தந்தையர் தினத்தன்றுஅந்த காட்சி மீண்டும் மீண்டும் என் நினைவுக்கு வந்தது.  

 

'என் பரலோகத் தகப்பனை இப்படிப்பட்ட குழந்தைத்தனமான நம்பிக்கையுடன் நான் நம்புகிறேனா?' என்ற கேள்வி என்னை துளைத்தது.  "நீங்கள்மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (மத்தேயு 18:3) என்று வேதம் சொல்லுகிறது.  அது குழந்தைபோன்ற நம்பிக்கையை குறிக்கும் என நான் நினைக்கிறன்.  குழந்தைகள் நாளையைப் பற்றி கவலைப்பட்டு தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்க மாட்டார்கள்.   ஆனால் அவர்களைப் பிடித்திருக்கும் அன்பான கரங்களை அவர்கள் நம்புகிறார்கள்.  

 

பெரியவர்களாகிய நாம் பெரும்பாலும் விளக்கங்களை விரும்புகிறோம்.   கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்ஜெபங்களின் பதில் ஏன் தாமதமாகின்றனஎதிர்காலம் ஏன் நிச்சயமற்றதாகத் தோன்றுகிறது என்பதை நாம் அறிய விரும்புகிறோம்.   நாம் சரணடைவதற்கு முன்பு உத்தரவாதங்களை விரும்புகிறோம்.   நம்முடைய பரலோகத் தகப்பன் நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆனால் அவரை நம்பும்படியாக அழைக்கிறார்.

 

நீதிமொழிகள் 3:5-6 "உன் சுயபுத்தியின்மேல் நம்பிக்கையாயிராமல்உன் முழுஇருதயத்தோடும் கர்த்தரை நம்பவேண்டும்என்று கூறுகிறது.   நாம் பார்க்கமுடியாததை கடவுள் பார்க்கிறார்.   அவருக்கு ஆரம்பத்திலிருந்தே முடிவு தெரியும்.   அவர் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடமாட்டார்.   அவரது நேரம்சரியானதுஅவரது ஞானம் எல்லையற்றதுஅவரது அன்பு நித்தியமானது.

 

ஒருவேளை இன்று நீங்கள் உங்கள் உடல்நலம்உங்கள் குழந்தைகள்நிதி அல்லது நிச்சயமற்ற எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறீர்களா?.   உங்கள் தலைமுடியை எண்ணிஉங்கள் எதிகாலத்தை பார்த்துக்கொள்வார். அவருடைய வழிகளை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்ஆனால் நீங்கள் அவருடையநம்ப வேண்டும்ஏனென்றால் அவருடைய வாக்குறுதிகள் ஆம் என்றும் ஆமென் என்றும் கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ளன.

 

என் நண்பரேஇந்த தந்தையர் தினத்தில்நாம் மீண்டும் சிறு குழந்தைகளைப் போல குழந்தைத்தனமானவர்களாக அல்லஆனால் குழந்தைகளைப்போலநமது பரம தகப்பனை நம்பும்போது நமக்கு உண்மையான ஓய்வு உண்டு.  அவர் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிட மாட்டார்.

 

ஜெபம்:-  பரலோகத் தந்தையேஉங்கள் உள்ளங்கையில் எங்களை வரைந்திருப்பதற்கு நன்றிநாங்கள் தேவையில்லாமல் கவலைப்படும் நேரங்களையும்உங்கள் வாக்குறுதிகளை விட எங்கள் அச்சங்களை நினைத்த நேரங்களையும் எங்களுக்கு மன்னியும்குழந்தைப் போன்ற நம்பிக்கையுடன் உம்மை  நம்பஎங்களுக்கு உதவும்,  ஏனென்றால் நீர் உண்மையுள்ளவர்நீர் எங்களை ஒருபோதும்  கைவிடமாட்டீர்ஆமென்.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *